கொங்கு மண்டலம் என்பது திண்டுக்கல் தாண்டியவுடனே ஆரம்பித்து விடுகிறது, கரூர், ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்றவை கொங்கு மண்டலம் என சொல்லப்படுகிறது.
தமிழில் கொங்கு தமிழ் ஒரு தனி மொழி இந்த அடிப்படையில் கொங்கு மண்டலங்களாக இந்த மாவட்டங்கள் உள்ளன.
இந்த மாவட்டங்களில் மலை வளம் அதிகம். குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற அடிப்படையில் இப்பகுதியில் முருகன் கோவில்கள் அதிகம்தான்.
மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது புகழ்பெற்ற பல முருகன் கோவில்கள் கொங்கு பகுதியிலேயே அதிகம் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனியே கொங்கு பகுதியின் ஆரம்பமாக இருக்கிறது.
பழனி மலைக்கோவில், திரு ஆவினன்குடி முருகன் கோவில்,காங்கேயம் சிவன் மலை முருகன் கோவில், ஊதியூர் கொங்கண சித்தர் வழிபட்ட முருகன் கோவில், கோவை மருதமலை முருகன் கோவில்,ஓதிமலை முருகன் சேலம் ஊத்துமலை முருகன் கோவில், கஞ்சமலை, கந்தாஸ்ரமம், ஈரோடு திண்டல் மலை, பச்சை மலை பவள மலை முருகன் கோவில்கள்,கந்த சஷ்டி கவசம் உருவாகிய சென்னிமலை முருகன் கோவில் என இப்பகுதியில்தான் முக்கியமான தமிழ் கடவுள் முருகன் கோவில்கள் அதிகம் உள்ளன.
இது ஒரு அதிசயமான நிகழ்வுதான் ஏன் இப்பகுதியில் மட்டும் அதிக முருகன் கோவில்கள் உள்ளது என்பதை தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிக ஆர்வலர்கள்தான் ஆராய்ச்சி செய்து விளக்க வேண்டும்.