முன்வினை பாவம் போக்கும் ஆடிகிருத்திகை வழிபாடு

எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் தமிழ் மொழிக்கு உண்டு. அந்த சிறப்புகளில் முக்கியமானது மொழிக்கென தனி கடவுள் இருப்பது தமிழ் மொழிக்கு மட்டுமே! தமிழ் மொழிக்கான கடவுள் முருகன் பெருமானாகும். தமிழ்நாட்டின் இடத்திற்கேற்ப…

எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் தமிழ் மொழிக்கு உண்டு. அந்த சிறப்புகளில் முக்கியமானது மொழிக்கென தனி கடவுள் இருப்பது தமிழ் மொழிக்கு மட்டுமே! தமிழ் மொழிக்கான கடவுள் முருகன் பெருமானாகும். தமிழ்நாட்டின் இடத்திற்கேற்ப முல்லை, பாலை, குறிஞ்சி, நெய்தல், மருதமென ஐவகையாக பிரித்து வைத்துள்ளனர். அதில் குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வமாகும். தேவர்களின் மாலைப்பொழுது தொடங்கும் ஆடி மாதத்தில் பல விசேசங்கள் இருக்கின்றது. அதில் மிக முக்கியமானது ஆடிக்கிருத்திகையாகும். இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுத்தல், அலகு குத்துதல், பாத யாத்திரை என பலவாறாய் முருகனை தொழுவது உண்டு.

மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். அன்றைய தினம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். பக்தர்கள் கிருத்திகை நாளில் விரதமிருந்து வீட்டில் முருகனுக்கு படையலிட்டு வணங்குவது வழக்கம். அனைத்து கிருத்திகைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் தை, ஆடி, கார்த்திகை என மூன்று கிருத்திகை நட்சத்திரத்தில் மட்டுமாவது விரதமிருந்து முருகனை வழிபடுவர். ஆடிக்கிருத்திகையில் தொடங்கி தைக்கிருத்திகை வரை அனைத்து கிருத்திகையிலும் விரதமிருந்து முருகனை  வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். முன்வினை பாவங்கள் தீரும்

முருகன் தோன்றிய வரலாறு..

  சிவனிடம் வரங்கள் வாங்கி, அதனால் உண்டான மமதையால் தேவர்களை சிறைப்பிடித்து, மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை கங்கை தாங்கி, வாயுபகவானின் துணையோடு சரவணப்பொய்கையில் கொண்டுப்போய் சேர்த்தாள். ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாய் அவதரித்தன. சரவணப்பொய்கையில் மிதந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு, ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமாரர்களை பாலூட்டி போற்றி வளர்த்தார்கள். ஒருநாள் அம்மையும், அப்பனும் தங்கள் பிள்ளையை காண வந்தனர். ஓடோடி வந்த பிள்ளைகள் அறுவரையும் அன்னை சேர்த்தணைக்க ஆறுமுகமும், பன்னிரு கையும் உடைய குழந்தையாய் முருகன் மாறினான்.

2a079814f0fe1febb047446c8ac76aa7-1

கார்த்திகைப்பெண்களின் சேவையினை பாராட்டி அவர்களை நட்சத்திர பட்டியலில் சேர்ப்பித்தோடு, கார்த்திகை நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகனை வழிப்படுவோருக்கு முருகனின் அருளும், முக்தியும் பரிபூரணமாய் கிட்டுமென அன்னை அருளியதோடு அன்றிலிருந்து முருகன், கார்த்திகேயன் எனவும் அழைக்கப்படுவான் எனவும் சொன்னாள். இதுதான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் உருவான கதை. ‘ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே’ என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு  கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இப்படிதான் கிருத்திகை விரதம் உண்டானது. கிருத்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டு வந்தால் திருமண வரம் கிட்டும், குழந்தைப்பேறு உண்டாகும், கல்வியில் சிறந்து விளங்கலாம், பதவியில் உயர்வும், நல்ல பெயரும் வங்கலாம். மொத்தத்தில் முருகனை ஆடிக்கிருத்திகை நாளில் வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும்…

முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன