விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் பத்து நாட்களும் மலர்கள், மாலைகள் மற்றும் மோதகங்கள் என விநாயகருக்கு பிடித்தமான 16 பொருட்களை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. பின்பு விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நாள் அன்று தற்காலிகமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தியின் போது பக்தர்களால் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக விநாயகர் சிலை நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளும் மிகப் பெரிய விழாவாக இது மாறி உள்ளது. நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பு வைபவத்துக்கு மிகவும் பிரபலமானது ஆகும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொள்வது என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமைகிறது. தனது வீடுகளில் மண்ணினாலும், மஞ்சளினாலும் விநாயகர் சிலை செய்யபட்டு பூஜைகள் செய்து வருகிறார்கள்.