மாங்கல்ய பலம் அருளும் வரலட்சுமி பூஜை செய்வது இப்படித்தான்..

ஒவ்வொரு ஆண்டும் வளர்பிறை ஆடி3 ம் வெள்ளி அல்லது ஆடி 4ம் வெள்ளிக்கிழமையினை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளைய தினம்(31/7/2020)கொண்டாடப்படுகிறது.. வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பது எப்படியென பார்க்கலாம்.. அதிகாலையில் எழுந்து…

ஒவ்வொரு ஆண்டும் வளர்பிறை ஆடி3 ம் வெள்ளி அல்லது ஆடி 4ம் வெள்ளிக்கிழமையினை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நாளைய தினம்(31/7/2020)கொண்டாடப்படுகிறது..

வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பது எப்படியென பார்க்கலாம்..

b56e3d15da16eb7179aa2bec284e07b7

அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டினை சுத்தப்படுத்தி வாசலில் கோலம், செம்மண் இட்டு, வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜையறையை அலங்கரித்து விளக்கேற்றி, பூஜையறையின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். இப்பொழுது அம்மன் திருமுகம், வெள்ளி, பித்தளையில் சிறியதும் பெரியதுமாய் கிடைக்கின்றது. அம்மன் சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு மனைபலகையில் வைக்க வேண்டும்.

அம்மன் சிலை முன் தலைவாழை இலை விரித்து, அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம்.

வரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம், ஜாக்கெட் பிட், வளையல், சீப்பு என அவரவர் வசதிப்படி கொடுக்க வேண்டும். நைவேத்யமாக கொழுக்கட்டை, அரிசி பாயாசம், கேசரி, அதிரசம், முறுக்கு என படைக்கலாம். பூஜை முடிந்ததும் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் . சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுங்கள் . சகல ஐஸ்வரியங்களும் உங்களுக்கு உண்டாகும் .


884 sharesLikeCommentShare

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன