மனவலிமை வேண்டும்- திருப்பாவை பாடல்களும், விளக்கமும் 30

By Staff

Published:

cc2bfa0eba6500e521a81dec5944b0d9-1

பொருள்

வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்.” 

பொருள்:
பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை , சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை(பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின்(ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள்பெற்று என்றும் இன்புறுவர்.

நாளை தை மாதம் பிறக்கிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனக் கூறுவர். அதன்படி நினைத்த காரியம் நிறைவேற ஆண்டவனின் அருளும், நிறைவேறாவிட்டால் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவத்தையும் அனைவரும் பெற்று இன்புறவேண்டும்.

ரங்கா! ரங்கா! ரங்கா!

ஆண்டாள் திருவடிகளே சரணம்

திருப்பாவை பாடலும், விளக்கமும் முற்றிற்று…

Leave a Comment