மஹா சிவராத்திரிக்காக சிறப்பான சில தலங்களை தரிசித்து வருகிறோம். அந்த வகையில் ஆந்திரமாநிலத்திலுள்ள ஸ்ரீசைலம் சிவன் கோவிலை பற்றி இன்று பார்க்கப்போகிறோம். இந்த கோவில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும் ஆந்திராவில் உள்ளது . இங்குள்ள மூலவர் மல்லிகார்ஜுனர், ஆந்திரமாவட்டம் கர்னூலில் இந்த கோவில் உள்ளது.
கந்த புராணத்தில் இக்கோவில் பற்றி என்ன சொல்லப்படுகிறது என பார்ப்போம். குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது இதுதான் கந்தபுராணம் கூறும் உண்மை.
நந்தியை தன் வாகனமாக சிவன் தேர்ந்தெடுத்தது இங்குதான் என புராணம் கூறுகிற்து. நந்தியே அவதரித்த தலம் என்பதால் பிரதோஷ பூஜைகள், சிவராத்திரி பூஜைகளில் இங்கு கலந்து கொள்வது நன்மையை தரும்.
பஞ்சபாண்டவர்கள் சம்பந்தமான பல நிகழ்ச்சிகள் இங்கு நடந்தேறியுள்ளன.நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.
மன்னர் சிவாஜி இந்த கோவிலுக்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளார்.
சிலாதர் என்ற முனிவர் குழந்தை இல்லாமல் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் இவருக்கு பிறந்தனர். குழந்தைகளைப் பார்ப்பதற்காக சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர்இதனால் சிலாதர் வருத்தமடைந்தார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,”தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்” என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த “நந்தியால்” என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்தான். பர்வத ன்கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். ஆதன்படிப் பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். ஆந்த ஸ்ரீ பர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை எனப் பொருள்படும்.
மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” எனப்படுகிறார்.
இங்குள்ள மலைக்கு கீழிருந்து மலை மேலே 3 மணி நேரம் செல்ல வேண்டும். அடர்ந்த காடு என்பதால் காலை 6 மணி முதல்தான் போக்குவரத்து வசதி உண்டு. இரவு பேருந்துகள் செல்ல அனுமதி இல்லை.
சிவராத்திரி நாட்களில் அதிகமான கூட்டம் இங்கு வரும். மற்றும் வார இறுதி நாட்களில் அதிகமான பக்தர்கள் கூட்டம் இங்கு வரும்.