கும்பகோணம் சென்றால் மறக்காமல் செல்ல வேண்டிய தாரசுரம் கோவில்

By Abiram A

Published:

கும்பகோணத்திற்கு நவக்கிரக கோவில் சுற்றுலா சென்றாலோ அல்லது முக்கியமான ஸ்வாமி மலை முருகன் கோவில் சென்றாலோ நாம தவறாமல் செல்ல வேண்டிய இடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்.

இக்கோவில் யுனெஸ்கோ மற்றும் தொல்பொருள் துறை பராமரிப்பில் உள்ளது. ஏனென்றால் முழுவதும் சிற்ப வேலைப்பாடுடன் இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிற்பங்களுடன் புகைப்படம் எடுப்பதற்காகவே பல சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர்.

கோவிலின் வெளியே அழகிய பார்க் உள்ளது. கோவிலை பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது . அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ள தூண்களில் தட்டினால் வினோத ஒலி எழும்புகிறது.

நுழைவாயிலில் நந்தியினருகே உள்ள பலி பீடத்தின் படிகள் இசை எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.

இரண்டாம் ராஜராஜனால் இக்கோவில் கட்டப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து தனது தலைநகரை இங்கு மாற்றிய இரண்டாம் ராஜராஜன் இங்கேயே இந்த கோவிலை அமைத்தான்.

இங்கு ஐராவதேஸ்வராக சிவபெருமான் காட்சி தருகிறார். ராஜராஜவரமுடையார் என முதலில் வைக்கப்பட்ட ஸ்வாமி பெயர் பிறகு ஐராவதேஸ்வரராக மாற்றப்பட்டது.

இங்கு அம்பாள் தெய்வநாயகி அம்மன்.

இங்கு சென்று வந்தால் அமைதியான ஆன்மிகமும் மனதுக்கு இனிய சுற்றுலாவும் சென்று வந்தது போல் ஒரு அமைதி நிலவும். சிறு குழந்தைகளை அழைத்து செல்ல ஏற்ற அருமையான இடம் இது.

கும்பகோணம் அருகில் உள்ள ஸ்வாமி மலை அருகில் இக்கோவில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் சில பேருந்துகள் தாராசுரம் ஊருக்குள் சென்றுதான் கும்பகோணம் செல்லும்.

Leave a Comment