கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று கொடியேற்றம்..

 ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பானபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், நாகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர்  என சைவக்கடவுளர்களும்,  ராமசாமி, ராஜகோபாலசுவாமி, சாரங்கபாணி, சக்கரபாணி, ஆதிவராகபெருமாள் போன்ற வைணவ கடவுளர்கள் உட்பட ஏராளமான…


bf6b138fa36e606a32d8b301a55e3bcf

 ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பானபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், நாகேஸ்வரர், காளகஸ்தீஸ்வரர், சோமேஸ்வரர்  என சைவக்கடவுளர்களும்,  ராமசாமி, ராஜகோபாலசுவாமி, சாரங்கபாணி, சக்கரபாணி, ஆதிவராகபெருமாள் போன்ற வைணவ கடவுளர்கள் உட்பட ஏராளமான தெய்வங்கள் ஒருசேர அருள்பாலிக்கும் இடம்தான் கும்பகோணம் .

தினமும் ஏதாவது ஆன்மீக நிகழ்வுகள்  நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கும். அதிலும் மாசி மாதத்தில் வரும் மாசி மகம்தான்  பிரசித்திப்பெற்றது. மாசிமக பெரு விழாவானது, இந்த ஆண்டு, கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (28/2/2020) கொடியேற்றத்துடன் கோலாகலமாய் தொடங்கியது. மேலும், இன்று இரவு, ஆதி கும்பேஸ்வரர் இந்திர வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். நாளை சனிக்கிழமையன்று (29/2/2020)-ம் கமல வாகனத்திலும், மார்ச் 1(ஞாயிற்றுக்கிழமை) தேதியன்று பூத வாகனத்திலும், கிளி வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைப்பெற இருக்கின்றது. மேலும், மாசி மக பெருவிழாவிற்காக தினமும் சுவாமி புறப்பாடு வைபவமானது நடைபெற இருக்கின்றது, 

பக்தர்கள் கலந்துக்கொண்டு இறைவனின் அருளைப்பெற வேண்டுகிறோம். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன