கொன்றை மலர்மாலை சூடியவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

By Staff

Published:


ad3aae4eaec9921b1717b28c01fb36da

பாடல்

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டன் பொடும்வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னச் செய்யும் தேவே

விளக்கம்

கங்கையாறுங் கோணுதலைத் தரும் அழகிய பிறையுங் கொன்றை மாலையுமுடைத்தாய்த் தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் பிள்ளையாகத்தந்த தேவன், ஒரு கொம்பையும் இரண்டு செவியையும் மூன்று மதத்தையும் நான்றவாயையும் ஐந்து கரத்தையு முடையோனாகிய ஒப்பற்ற யானையினது தாள்கள் உள்ளம் உருகுதலைச் செய்வதாகிய அன்போடுகூடி வந்தித்து ஒழியாது இரவும் பகலும் நினைப்போரது நெஞ்சில் திருக்கை ஈண்டணுகாவண்ணம் துரக்கும். பிரம விஷ்ணுக்கள் பதங்களும் ஒன்றல்லவென்ன மிக்க வீட்டின்பத்தையும் உண்டாக்கும்.

Leave a Comment