காசு வெட்டி போட்டு உறவை முறித்துக்கொள்ளும் வினோத வழிபாடு- கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில்

By Staff

Published:

செய்யாத தவறுக்கு பரிகாரம் தேடுவோர் தம் மீது வீண் பழி சுமத்தப்பட்டோர் இந்த அம்பாளிடம் வந்து வேண்டிக்கொள்கின்றனர். இங்கு வந்து நான் எந்த தவறும் செய்யவில்லை என் மீது வீண் பழி சுமத்தியவர்களை பார்த்துக்கொள் என்று வேண்டிக்கொள்கின்றனர்.

a6ec798965d533d7b667cd47345f6246

அது போல உறவுக்காரர்கள் தங்களுக்குள் கொண்ட பகையால் இக்கோவிலில் காசு வெட்டி போட்டு பிரிந்து விடுகின்றனர். பின்பு சில காலம் கழித்து யார் மீது தவறு உள்ளதோ அவர்கள் குடும்பத்துக்கு ஏதாவது பங்கம் ஏற்பட மீண்டும் இந்த கோவிலுக்கு வந்து அம்மன் முன் தாங்கள் செய்தது எல்லாம் தவறு என வேண்டிக்கொள்கின்றனர் மீண்டும் உறவுக்காரர்கள் அம்மன் முன்பே ஒன்று கூடுகின்றனர்.

கடும் ஏவல் பில்லி சூனியங்களையும், கண் திருஷ்டிகளை நீக்குபவளாக இங்குள்ள வெட்டுடையார் காளி இருக்கிறாள்.

இங்கு உள்ள வெட்டுடையார் அய்யனார் பெயரிலேயே இக்காளி அழைக்கப்படுகிறாள்.

திருமணத்தடை, குழந்தையின்மை, திருஷ்டி கோளாறுகள் அனைத்தையும் நீக்கும் கண்கண்ட தெய்வமாக இக்காளியம்மன் விளங்குகிறாள்.

சிவகங்கையில் இருந்து 12 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண் திருஷ்டிக்கு இங்கு மந்திரித்து கொடுக்கப்படும் தேங்காயை வீட்டில் கட்ட சொல்கிறார்கள்.

இது புகழ்பெற்ற கோவிலாகும்.

Leave a Comment