இன்று எங்கும் ஒலிக்கும் முக்கிய பக்தி பாடல் கந்த சஷ்டி கவசம் பாடலாகும். வியாபார நிறுவனங்கள், வீடுகள், இன்னும் பலவற்றில் முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடல்தான் மாலை நேரத்தில் ஒலிக்கும் .
இந்த பாடலை ஒலிக்க விட்டாலே பக்தி மணம் கமழும். கந்த சஷ்டி கவசம் பாடலை எழுதியவர் பாலதேவராய ஸ்வாமிகள் என்றாலும் அதை மக்கள் மனதில் ராகமாக பாடி கந்த சஷ்டி கவசம் இந்த ராகத்தில்தான் இந்த தாளத்தில்தான் இருக்கும் என ஒரு அதன் பாடல் வடிவை மனதில் பதியவைத்தவர்கள் இவர்கள்.
தஞ்சை அருகில் உள்ள சூலமங்கலம் கிராமத்தை சேர்ந்த இவர்கள் முருகன் பாடல்கள் மட்டுமின்றி பல வித பக்தி பாடல்களை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்கள்.
சூலமங்களம் ராஜலட்சுமி , சூலமங்களம் ஜெயலட்சுமி என்ற இரட்டை சகோதரிகளே சூலமங்களம் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர்.
இவர்கள் இந்த கந்த சஷ்டி கவசத்தை பாடி ஆல்பமாக வெளியிட ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஒலிநாடா வெளியிடும் கம்பெனிகளின் ஏறி இறங்கி இருக்கிறார்கள். மிகுந்த சிரமத்துக்கு பின்பே கந்த சஷ்டி கவசம் ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.
கந்த சஷ்டி கவசத்தை நம் வீட்டு பெண்கள் இன்று பூஜையறையில் உட்கார்ந்து ஒரு ராகமாக பாடுகிறார்கள் என்றால் அது இந்த முறையில்தான் பாட வேண்டும் என ஆன்மிக வழிமுறையை நமக்கு கொடுத்து சென்றவர்கள் இவர்கள்தான்.