கால பைரவர்தான் இந்த உலகத்தை இயக்குபவர் சிவபெருமானின் அம்சம். எல்லா சிவாலயங்களிலும் கோவில் நடையை அடைக்கும்போது காலபைரவருக்குத்தான் கடைசியாக பூஜை செய்து வழிபடுவார்கள் கோவிலை காப்பவர் பைரவர் சுவாமிதான்.
அதன்படியாகவே சிவன் கோவிலில் இரவு கோவில் நடை சாற்றும்போது பைரவருக்கு பூஜை செய்து சாற்றப்படுகிறது. அப்போதுதான் சிறப்பாக கோவில் பாதுகாக்கப்படும் பைரவர் காவல் தெய்வமாக பாவிக்கப்படுவதால் அவர் கோவிலை சரியான முறையில் இரவு நேரத்தில் பார்த்துக்கொள்வார் என்பது நம்பிக்கை.
அவர் கோவிலுக்கு மட்டும் காவலாளி அல்ல இந்த உலகை காக்கும் காவலாளி அவரே. உலக மக்களுக்கு துன்பம் துயரம் நேர்ந்தால் அதை துடைப்பவரும் அவரே.
வாயில்லா ஐந்தறிவு ஜீவன்கள் உட்பட பல ஜீவன்களுக்கும் அவரே பாதுகாவலர். சனீஸ்வரனின் குரு இவரை வணங்கினால் சனீஸ்வரனால் ஏற்படும் தோஷங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளும் பைரவருக்கு உகந்த நாளாக கருதப்பட்டு சிவன் கோவில்களில் அபிசேகம், ஆராதனைகள் நடக்கிறது. பல பக்தர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இதில் கலந்து கொள்வதன் மூலம் அனைத்து தோஷங்களும் நிவர்த்தி ஆவதாக ஐதீகம்.
காலபைரவருக்கு
கால தேவனாக இருப்பவர் இவரே! நவக்கிரகங்களின் தலைவரும் இவரே!
ஜோதிடர்களின் இஷ்ட தெய்வமும் இவரே!!!
64 வித அவதாரங்களாக இவர் அவதரித்து,மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள்,பறவைகள்,விண் உலகத்தில் வாழ்ந்து வரும் தேவர்கள்,தேவ இனங்கள்,சித்தர்கள்,ரிஷிகள்,கந்தர்வர்கள் என்று அனைவரது வாழ்க்கையையும் சூட்சுமமாகத் தீர்மானிப்பது மஹாகால பைரவப் பெருமான் தான்!
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பல ஆயிரம் யுகங்களுக்கு முன்பு ஈசனின் படைப்பாக உருவானவர் தான் மஹாகால பைரவர்!
அப்படி உருவான நாள் தான் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி ஆகும்;
இந்த விளம்பி வருடம்,கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி நாளானது 19.11.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 1.50 முதல் 20.11.2019 புதன் கிழமை காலை 11.41 வரை இருக்கின்றது;
இப்பிறவியில் செய்த,செய்து கொன்டிருக்கும்,செய்ய இருக்கும் கர்மவினைகளும் பாவங்களாகவும்,புண்ணியங்களாகவும் நமது ஆத்மாவில் சேர இருக்கின்றன;
காலபைரவரை தொடர்ந்து வணங்கி வர நம் கர்மவினைகள் அழிக்கப்படும் அதற்குரிய தகுந்த வழிகாட்டுதல் காண்பிக்கப்படும்.
இந்த நாளில் நாம் பைரவரை வணங்குவோம். அவரின் அருள் பெறுவோம். உங்கள் நன்மைக்காக மட்டுமல்லாமல் உலக நன்மைக்காகவும் வேண்டுவோம்.
காலபைரவ பெருமானின் கீழ்க்கண்ட மந்திரங்களை கீழ்க்கண்ட வழிமுறைப்படி சொல்லி வருவோம்.
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை அல்லது
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ(மூலமந்திரம்) என்ற மந்திரத்தை அல்லது
ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோஹ் பைரவப் ப்ரசோதயாத் என்ற காயத்ரி மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜபிக்க வேண்டும்;
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரையிலும்,அதிக பட்சம் 30 ஆண்டுகள் வரையிலும் ஜபித்து வருவதால்,கால பைரவப் பெருமானின் அருள் கிடைக்கும்;
கால பைரவ பெருமானின் வாகனமான நாய்க்கு உணவுகளை தொடர்ந்து வழங்குங்கள். ஆதரவற்ற தெரு நாய்களை கவனியுங்கள் கால பைரவ பெருமானின் நல்லருள் நமக்கு சீக்கிரம் கிடைக்கும்.