காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதி வரதராஜ பெருமாளான அத்திவரதர் சில காரணங்களுக்காக சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், வெள்ளிப்பெட்டியில் வைத்து அனந்த சரஸ் புஷ்கரணி நீருக்கடியில் வைக்கப்பட்டார். இவரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீருக்குள்ளிருந்து வெளியில் கொண்டுவரப்பட்டு அருகிலிருக்கும் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைப்பது வழக்கம்.
அதன்படி கடந்த ஜூலை 1 முதல் அத்திவரதர் தரிசனம் தொடங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றனர். சராசரியாக தினமும் 2 லட்சம் பக்தர்கள் வந்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. சிறுசிறு அசம்பாவிதங்களும் நடந்தேறியது. இந்திய குடியரசு தலைவர் முதற்கொண்டு சினிமா நட்சத்திரங்கள் வரை பல்வேறு பிரமுகர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றனர்.
அத்திவரதர் தரிசனம் வரும் ஆகஸ்ட் 17 தேதியோடு முடிவடையும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. அத்திவரதர் பொதுமக்களுக்கான தரிசனம் முடிந்து, ஆகம விதிகள் நிறைவேற்றப்பட்டு வெள்ளிப்பெட்டிக்குள் அத்திவரதரை வைத்து அனந்த சரஸ் புஷ்கரணி நீருக்குள் வைக்கப்படுவார். பின்னர் திருக்குளத்தில் நீர் நிரப்பப்படும். இதுவே வழக்கம்.
இனி அத்தவரதர் 40 வருடங்கள் இருக்கப்போகும் இடத்தினை பார்க்கும் ஆவல் எல்லோருக்கும் இருக்குமல்லவா?! இதோ, அத்திவரதர் இருக்கப்போகும் இடத்தை நெட்டிசன்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் சில..
படத்தில் கண்ட இடத்தில்தான் அத்திவரதர் இனி சயனத்தில் இருக்கப்போகிறார்.