இன்று இந்த அபிஷேக பொருட்களை கொடுத்தால் இந்த நன்மைகள் கிடைக்கும்…

சிவராத்திரியன்று எந்தெந்த ராசிக்காரரகள் என்னென்ன பொருட்களை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்ன்னு பார்த்தோம். அதேப்போல எந்த அபிஷேகப்பொருட்களுக்கு என்னென்ன நற்பலன்கள் கிடைக்குமென பார்க்கலாம்.. அருகம்புல் சாற்றினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும். நல்லெண்ணெய் கொண்டு…

445ce6aae818de29b21ecc96f9790395-1

சிவராத்திரியன்று எந்தெந்த ராசிக்காரரகள் என்னென்ன பொருட்களை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம்ன்னு பார்த்தோம். அதேப்போல எந்த அபிஷேகப்பொருட்களுக்கு என்னென்ன நற்பலன்கள் கிடைக்குமென பார்க்கலாம்..

அருகம்புல் சாற்றினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.
நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்வித்தால் அபம்ருத்யு நசிக்கும்.
பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்தால் சகல சௌபாக்கியம் கிட்டும்.
தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் பலம், ஆரோக்கியம், முக தேஜஸ் கிட்டும்
பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.
கரும்பு சாற்றினை கொண்டு அபிஷேகம் செய்தால் தன விருத்தி கிட்டும்.
சர்க்கரையினைக்கொண்டு அபிஷேகம் செய்தால் துக்கம் நசிக்கும்.
தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் உடல் ஆரோக்கியம் கிட்டும்.

75aa6194e4c096e2f1f9b44290308070

இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தால் சகல சம்பத்தும் கிட்டும்.
ருத்திராட்சம் போட்ட நீரினைக்கொண்டு அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.
அரைத்தெடுத்த சந்தனம் அபிஷேகம் செய்தால் புத்திர யோகம் கிட்டும்.
சொர்ணா (தங்கம்) அபிஷேகம் செய்தால் தரித்தரம் நீங்கும்.
சுத்தமான நீரினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப கிடைக்கும்.
வில்வ இலை போட்ட நீரினால் அபிஷேகம் செய்தால் போக பாக்யங்கள் கிட்டும்.
அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.
திராட்சை சாற்றினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம் உண்டாகும்.

b3da6a26c5697cc0fdf06355de02187d

மாம்பழ சாற்றினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.
மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும். பேரிச்சம்பழம் சாற்றினால் அபிஷேகம் செய்தால் பகைவர்கள் இல்லாமல் போவர்.
நாவல்பழ சாற்றினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய சித்தி கிட்டும்.
வாசனைப்பொருளான கஸ்தூரி கலந்த நீரினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.
நவரத்தினங்கள் போட்ட நீரினால் அபிஷேகம் செய்தால் பதினாறு பேறுகளும் கிட்டும்.

அபிஷேகப்பிரியரான சிவனுக்கு தகுந்த பொருட்களை தந்து சிவன் அருள் பெறுக!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன