எனக்கு சரியா படிக்க முடியல…நல்ல வியாபாரம் பண்ண முடியல, நிர்வாகத்தை சரி செய்ய முடியல…கணவன் மனைவிக்குள்ள ஏகப்பட்ட பிரச்சனை…எனக்குத் தான் வாழ்க்கையில் இப்படியெல்லாம் பிரச்சனை வருதுன்னு சொல்லி சொல்லி நிறைய பேர் புலம்பித் தவிப்பார்கள். ஆனால் அதிலிருந்து விடுபட வழியைத் தேடுவதில்லை.
எப்படி பின்பற்றுவது?
அம்பிகையின் அவதார நாள் இதுதான். அம்பாளுக்கு மிக விசேஷமான வளைகாப்பு நடைபெறுவது இந்நாள் தான். ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாள் இதுதான். சைவ வைணவ பேதைமை இன்றி எல்லா கோவில்களிலும் கோலாகலமாகக் கொண்டாடுவர்.
இந்த ஆடிப்பூரத்தில் யார் அம்பாளுக்கு வளைகாப்பு இடுகிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பாக அடுத்த ஆண்டில் குழந்தை பிறக்கும்.
திருமணம் ஆக வேண்டும் என்று காத்துக் கொண்டு இருப்பவர்கள் காலையில் எழுந்து வீட்டில் இருக்கும் அம்பாளின் திருவுருவப்படத்தை சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். ஒரு மலர்ப்பலகை வைத்து அதில் அம்பாளின் திருவுருவப்படத்தை வைங்க.
மலர்கள் தூவி அலங்காரம் செய்து கண்ணாடி வளையல் மாலை போட்டுக்கொள்ளுங்கள். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் வெல்லம் வைத்துக் கொள்ளலாம்.
மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர் தெளித்து நழுங்கு வைக்க வேண்டும். அம்பிகை தோஸ்திரங்கள் அல்லது அபிராமி அந்தாதி பாராயணம் பண்ணலாம். பின்னர் தூப தீப ஆராதனைகள் காட்டுங்க. காலையில் வெறும் வயிற்றில் இந்த பூஜையை செய்ய வேண்டும். பின்னர் அந்தப்படத்தை எங்கு எடுத்தோமோ அங்கேயே வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்தப் பலகையை கிழக்கு மேற்காக போட்டு கிழக்கு நோக்கி அந்தப் பெண்ணையோ, பையனையோ உட்கார வைங்க. அம்பிகைக்கு நழுங்கு பண்ணியது போல் அவர்களுக்கும் பண்ண வேண்டும். அம்பாளுக்கு கொடுத்த நைவேத்தியத்தையே அவர்களுக்கும் கொடுங்க. அப்போது நீங்கள் என்ன பிரார்த்தனையோ அதைப் போட வேண்டும். பின்னர் அம்பாளுக்கு சாற்றிய வளையல்களை அந்தப் பெண்ணுக்கு போட்டு விட்டு கல்யாணம் ஆக வேண்டிக் கொள்ளுங்கள்.
ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், ஒரு வெத்தலைப்பாக்கு எடுத்து முந்தானையில் சொருகிக்கொண்டு இப்போது எனக்கு மடி நிறைந்தது போல எனக்கு குழந்தை வரம் வேண்டும் என்று வேண்டுங்கள். பசங்களா இருந்தா அடுத்த ஆண்டு கணவன் மனைவியாக நாங்கள் இதே போல பூஜை செய்து வழிபட வேண்டும் என்று அம்பாளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
சுமங்கலிகள் என்றால் வீட்டில் சந்தோஷம் பொங்கவும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேலோங்கவும் அம்பாளுக்கு வளையல் சாற்ற வேண்டும். பின்னர் மஞ்சள் குங்குமத்துடன் அருகில் உள்ள பெண்களுக்கு இந்த வளையலை அன்பளிப்பாகவும் கொடுக்கலாம். அவர்களும் உங்களை வாழ்த்துவதன் மூலம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.