தீபாவளிக்கு தீபங்களை வரிசைப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் திருக்கார்த்திகை திருநாளில் ஒவ்வொரு வீட்டையும் அகல் விளக்குகள் அலங்கரிக்கும் என்பதை அனைவரும் அறிவர். அன்றைய தினம் இல்லங்கள் தோறும் பல்வேறு எண்ணிக்கையில் அகல் விளக்குகள் ஏற்றி மக்கள் இறை வழிபாட்டை மேற்கொள்வர்.

திருவிளக்கு இறைவனின் பிரதிநிதியாக பார்க்கப்படுவதால் அதற்கான மரியாதையை நாம் அளிக்க வேண்டும். கார்த்திகை தீபத்தன்று அவல், பொரியில் வெல்லப்பாகு சேர்த்தும், கார்த்திகை பொரி படைத்தும் வழிபாடு செய்யுங்கள்.
கந்தன் புகழ் பாடி கார்த்திகை திருநாளை கொண்டாடுவோம்…!
கார்த்திகை தீபத்திருநாள் அன்று அகல் விளக்குகளை சுவாமி அறையில் ஏற்றி தெரிந்த சுலோகங்களை பாடி கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபடுங்கள்.

விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு. வெறும் வாயினால் ஊதி விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது நீர்த்துளி, பால் துளி கொண்டு குளிர வைக்க வேண்டும்.
தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும் தோஷங்களையும் போக்கும். ஆனால் எக்காரணம் கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.

கார்த்திகை தீப திருநாளில் மட்டும் இல்லாமல் அனைத்து நாட்களிலுமே அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பாகவும் மாலையில் சூரியன் மறைவதற்கு முன்பாகவும் வீட்டில் வாசல் தெளித்து கோலமிட்டு பூஜை அறையிலும் வீட்டின் வாசல் படியிலும் விளக்கு ஏற்றலாம். இதனால் நேர்மறை சக்திகள் நம்மை சூழ்ந்து வாழ்வில் இருள் விலகி ஒளி பிறக்கும்.
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

