இன்றைய நாளில் பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகி வருகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, ஈகோ, சேவை மனப்பான்மை இல்லாமை, சகிப்புத்தன்மை இல்லாமை என்பது தான் பல காரணங்கள்.
என்னதான் இருந்தாலும் இதற்கும் நாம் கடவுளை வழிபடும்போது தான் முழுமையான தீர்வு கிடைக்கிறது. அப்படி என்றால் வீட்டில் சந்தோஷம் பொங்க, கணவன், மனைவிக்குள் ஒற்றுமை ஓங்க நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்பதைப் பார்க்கலாம். வாங்க.
அமாவாசை திதியைக் கணக்கு வைத்தே கேதார கௌரி விரதத்தைக் கடைபிடிப்பார்கள். இதுவும் தீபாவளி அன்று தான் வருகிறது. கேதார கௌரி நோன்பு என்றால் அம்பாள் சிவபெருமானோடு இணைந்தே இருக்க வேண்டும்.
சரிபாதி பெற வேண்டும். அர்த்தநாரீஸ்வரரோட கோலத்தைப் பெற வேண்டும் என்று கேதார மலையில் இருந்து அம்பாள் தவம் நோற்று சிவபெருமானிடம் வரம் வேண்டிய நாள்.
அதனால் இந்த நோன்புக்கு கேதார கௌரி விரதம் என்று பெயர். இந்த விரதத்தை 21 நாள்கள், 15 நாள்கள், 1 வாரம் அல்லது 1நாள் கடைபிடிக்கிறவர்களும் உண்டு.
வரும் 12ம் தேதி தீபாவளி கொண்டாடி விடலாம். அதே போல அம்பாள் கோவில் சென்று நோன்பு எடுத்துக் கொள்ளலாம். நோன்பு எடுத்தவர்கள் வீட்டில் வைத்து அம்பாளுக்குப் பூஜை செய்துவிட்டு தீபாவளி அன்று காலையில் உபவாசம் இருக்க வேண்டும். அன்றைய தினம் மாலை 3.10மணிக்கு அமாவாசை விரதம் துவங்கி விடுகிறது.
அதனால மாலை நேரத்தில் கௌரிக்கு விளக்கேற்றி அம்பிகையின் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம். லட்சுமி குபேர பூஜையும் செய்யலாம். விரதத்தை மாலையில் பூர்த்தி செய்வாங்க. அதனால் அடுத்த நாள் காலையில் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
அதன்பிறகு அடுத்த விரதமான கந்த சஷ்டி விரதத்தை மதியத்திற்கு மேல் தொடங்கிக் கொள்ளலாம். கௌரியை வழிபட்டு கணவன் மனைவி ஒற்றுமை குடும்பத்துல மகிழ்ச்சியா இருக்குறது, தீர்க்க சுமங்கலியா வாழணும்னு கௌரிமாதாவை வழிபடக்கூடிய நோன்பு தான் கேதார கௌரி விரதம்.
அன்றைய நாளில் இந்த விரதத்தை சந்தோஷமாக இருந்து கௌரி மாதா என்றும் நிலைத்து இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த விரதத்தை நாங்கள் இருக்க அருள்புரிய வேண்டும் என்ற உங்களது பிரார்த்தனை இருக்க வேண்டும். அதை அம்பாள் நிறைவேற்றித் தருவாள்.