நினைத்த காரியம் கைகூட சக்தி வாய்ந்த சில எளிய ஆன்மீக பரிகாரங்கள்

By John A

Published:

ஜோதிடத்திலும் ஆன்மீகத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் சில பழக்க வழக்கங்களை முறையாகக் கடைப்பிடிப்பர். மேலும் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் நினைத்த காரியங்களும் கை கூடும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக முயற்சி என்பதும் அதிகம் வேண்டும். அந்த வகையில் நினைத்த காரியங்கள் கை கூட சில எளிய பரிகாரங்களைப் பார்க்கலாம்.

தடைபட்ட திருமணம் நடைபெற…
எத்தனை வரன்கள் பார்த்தாலும் திருமணம் கைகூடவில்லையா? வயது தான் ஏறிக் கொண்டே செல்கிறது ஆனால் திருமண வரன் அமையாதவர்கள் ஒவ்வொரு தமிழ் மாதமும் துவங்கும் நாளில் அன்றைய தினம் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நளில் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று வில்வ மாலை சாத்தி அல்லது அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். மேலும் பிரதோஷ நாளில் நந்திக்கு பால், தயிர் வாங்கி அபிஷேகத்திற்கு அளித்தால் திருமணம் காரியம் எளிதில் கை கூடி வரும்.

ஆடி அமாவாசை பித்ரு வழிபாட்டின் முக்கியத்துவமும் நன்மைகளும்…

வளமான வாழ்வு அமைய..
நாம் ஒவ்வொருவரும் வளமான வாழ்வு வாழவே இந்த உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நமது வாழ்வு வளம் பெற விநாயகப் பெருமானுக்கும், சனி பகவானுக்கும் மிகவும் உகந்த வன்னி மரத்தின் கீழ் அமைந்த இத்தெய்வங்களை வழிபடும் போது நினைத்த காரியம் கை கூடி, பொன் பொருள் சேர்க்கை உள்ளிட்ட சகல நன்மைகளும் கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவ..
தினமும் அல்லது சனிக்கிழமை தோறும் வீட்டின் அருகில் உள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி திரும்பும்.

தோஷங்கள் நீங்க…
ஓம் நமசிவாய என்ற சிவமந்திரத்தை தினமும் அதிகாலையில் 108 முறை உச்சரிக்கலாம். அல்லது அமாவாசை நாட்களில் பசுக்களுக்கு பச்சரிசி, தவிடு, அகத்திக்கீரை உள்ளிட்டவற்றைக் கொடுத்து பசியாற்றினால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

கல்வியில் சிறந்து விளங்க..
விநாயகப் பெருமானுக்கு செம்பருத்திப் பூ மாலை (27 பூக்கள்) தொடுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.30 மணி – 12.00 மணிக்குள் சூட்ட வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஞானம் பிறக்கும் என்பது நம்பிக்கை. மேலும் ஏலக்காய் மாலை சூட்டியும் வழிபட்டால் அறிவு விருத்தியாகும்.