கேட்பன யாவும் தரும் கருட பஞ்சமி இன்று

By Staff

Published:

7e0abb7f0245f9655f805057fb5ac836

ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி நாளைத்தான் ‘கருட பஞ்சமி’ என்று அழைப்பார்கள். இந்த நாளில் கருடாழ்வாரை தரிசனம் செய்வது, சகல முன்னேற்றங்களுக்கும் வழி வகுக்கும். கருட பஞ்சமியின் கதை வருமாறு

காசியப முனிவருக்கும் விநதைக்கும் பிறந்தவர் கருடன். கருடன் பிறந்தபோது, அவரது தாய் விநதை, தன்னுடைய சகோதரியான கத்ரு என்பவளிடம் அடிமையாக இருந்தாள்.

தன் தாயை விடுதலை செய்யும்படி கத்ருவிடம் கருடன் கேட்டார். அதற்கு அவள், “என்னுடைய பாம்பு குழந்தைகளுக்கு இந்திரனின் வசம் உள்ள அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், விநதையை விடுதலை செய்கிறேன்” என்று நிபந்தனை விதித்தாள்.

தாயைக் காப்பதற்காக தன்னுடைய பெரிய சிறகுகளை அடித்துக் கொண்டு இந்திரலோகம் சென்றார் கருடன். அவர் அமிர்தத்தை தேடி வந்திருப்பதை அறிந்த தேவர்கள், கருடனுடன் போரிட்டனர். ஆனால் கருடனை யாராலும் வெல்ல முடியவில்லை. இந்திரனும் கூட கருடனை வெற்றிகொள்ள முடியவில்லை. இருப்பினும் இந்திரன் கையில் இருந்த வஜ்ராயுதத்திற்கு மதிப்பளித்த கருடன் தன்னுடைய சிறகில் இருந்து ஒரு இறகை மட்டும் உதிர்த்து விட்டு அமிர்தத்துடன் பூலோகம் சென்றார்.

இப்படி தன்னுடைய தாயை அடிமைச் சங்கிலியில் இருந்து விடுதலை செய்தவர், கருடன். அவர் மகாவிஷ்ணுவின் சேவைதான் தனது பாக்கியம் என கருதியவர். இன்று பெருமாள் கோவில்களில் இருக்கும் கருடனுக்கு விசேஷ வைபவங்கள் நடக்கும்.

 நாராயணனுக்கு தொண்டு செய்பவர்களில் முதன்மையானவர் முக்கியமானவர் கருடன் ..பறவைகளின் அரசன் என்று கருதப்படும் கருடாழ்வார், விஷக்கடிகளை தீர்க்கும் வல்லமை படைத்தவர்.

இன்று பெருமாள் கோவில் சென்று கருடனை வணங்குங்கள் உங்கள் வினைகள் தீரும்.

Leave a Comment