ஈரோடு திண்டல் மலை முருகன் கோவில்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப கொங்கு மண்டலம் எல்லாம் முருகப்பெருமான் மலை மீது காட்சி தருகிறார். அந்த வகையில் மிகப்பெரும் மாநகரமான தொழில் நகரமாம் ஈரோடு நகரில் திண்டல் மலை என்ற…

thindal malai murugan 22

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப கொங்கு மண்டலம் எல்லாம் முருகப்பெருமான் மலை மீது காட்சி தருகிறார்.

அந்த வகையில் மிகப்பெரும் மாநகரமான தொழில் நகரமாம் ஈரோடு நகரில் திண்டல் மலை என்ற இடத்தில் முருகன் மலை மீது காட்சி தருகிறார்.

இங்கு வேலாயுத சாமி என்ற பெயரில் முருகன் அருள் புரிகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

இங்கு தீபஸ்தம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது அதில் கார்த்திகை தீபத்தன்று பக்தர்களே தீபம் ஏற்றி வழிபடலாம்.

இங்குள்ள முருகன் வேலுடன் காட்சி அளிக்கிறார்.பக்தர்களின் மனவினைகளையும் தீராத்துயரங்களையும் இவர் போக்குகிறார்.

இக்கோவிலின் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள இடும்பன், ஒரு முறை கடும் பஞ்சம் ஏற்பட்ட நேரத்தில்  மழை பொழியவில்லை என இறைவனை வேண்டியதாகவும் அதனால் மழை பொழிந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால் தங்களின் நல்ல நோக்கங்கள் நிறைவேற்றி தருமாறு இடும்பனை மனமார பிரார்த்தனை செய்து கொள்கின்றனர் இப்பகுதி மக்கள்.

மலையின் வடகிழக்கில்  உள்ள அழகிய இயற்கைச்சுனையில் வற்றாத நீரூற்று ஒன்று இறைவனின்  அபிஷேகத்திற்கும் பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.

ஈரோடு நகரின் வளர்ச்சிக்கும் இந்த ஊரின் நடுநாயகமாக வீற்றிருக்கும் முருகனின் அருளே காரணம் என நம்பப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன