இன்றைய தினம் நரசிம்ம ஜெயந்தி. எதிரிகளால் ஏற்படும் இன்னல், இனம்தெரியாத பயம் போன்றவற்றை நீக்கி நம்மை காப்பவர் இந்த நரசிம்மர். நரசிம்மரை நம்பிக்கையோடு வழிபடுபவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
மந்திரம்…
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
பொருள்:
கோபம், வீரம், தேஜஸ், (பிரகாசம்) கொண்ட மகாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! எல்லா திசைகளையும் பார்த்து கொண்டிருக்கும் உன்னிடமிருந்து தவறு செய்பவர்கள் யாராலும் தப்பிக்க முடியாது.
இன்றைய தினம் உடல், மனம் தூய்மையோடு விரதமிருந்து இன்று மாலை 6.30 மணியிலிருந்து 7.20 மணிக்குள் நரசிம்மரின் கோவத்தை தணிக்கும் தயிர்சாதம், பானகம் ஆகிவற்றை படைத்து, தானம் செய்தால் நல்ல பலன் பெறலாம்.
நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!