எதிரிகளை வெல்லனுமா?! அப்ப இந்த துர்க்கை அம்மன் மந்திரம் சொல்லுங்க..

4a9d961523eef7b9c25933177dcd8c83

” துர்கா”என்றால் வெல்ல முடியாதவள் என ஒரு பொருளுண்டு. துர்கை அம்மனை வழிபடுவோருக்கு அளப்பறிய நன்மைகளை அளிப்பதோடு, எதிரிகளை வெல்லும் திறனையும் அளிப்பாள்.

மூல மந்திரம்..

ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தன்னோ துர்கிப்ரசோதயாத்

பொருள்:

காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே! என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே! உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவுபடுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.

4e0f1169885381a53570c4093bd0c54b

சொல்லும் முறை..

அம்மனுக்கு உகந்த செவாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் குளித்து, உடல், மனத்தூய்மையோடு ராகுகால வேளையில் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறவேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும். செய்வினை, பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள்.