வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தில் மஞ்சள் குங்குமம் தடவி வைப்பதற்கான காரணம் தெரியுமா…?

பொதுவாக வீட்டை கட்டும்போது தலைவாசல் நிலை வைக்கும் போது சிறப்பு பூஜைகள் செய்து வைப்பர். இதற்கு காரணம் ஒரு வீட்டிற்கு முக்கியமானது தலைவாசல் தான். அந்த தலைவாசலில் தான் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக…

Lemon

பொதுவாக வீட்டை கட்டும்போது தலைவாசல் நிலை வைக்கும் போது சிறப்பு பூஜைகள் செய்து வைப்பர். இதற்கு காரணம் ஒரு வீட்டிற்கு முக்கியமானது தலைவாசல் தான். அந்த தலைவாசலில் தான் குலதெய்வம் மற்றும் மகாலட்சுமி குடியிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தலை வாசலில் பூஜை செய்து சில பொருட்களை வைப்பதும் கட்டி தொங்க விடுவதும் தீய சக்திகள் வீட்டில் உள்ளே வராமல் தடுக்கவும் கண்திருஷ்டி படாமல் இருக்கவும் செய்யப்பட்டு வரும் வழக்கமாகும்.

எலுமிச்சை பழங்களுக்கு எதிர்மறை ஆற்றல்களை உள்ளெழுத்து கொண்டு நேர்மறை ஆற்றல்களை கொடுக்கக்கூடிய சக்தி இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அதனால்தான் எலுமிச்சை பழத்தை ‘தேவ கனி’ என்றும் கூறுகின்றனர். அதனால்தான் வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்தி நுழையாமல் இருப்பதற்காக ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து சமமாக இரண்டாக வெட்டி ஒரு பாதி மூடியில் மஞ்சளும் ஒரு பாதி மூடியில் குங்குமமும் தடவி நிலை வாசல் அருகே இருபுறமும் வைப்பார்கள். இது கண் திருஷ்டி உள்ளே வராமல் தடுக்கும் என்பது ஐதீகம்.

புள்ளிகள் இல்லாத நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும் எலுமிச்சை பழத்தையே இந்த மாதிரி வீட்டு வாசலில் வைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஏற்கனவே மஞ்சள் குங்குமம் தடவி வைத்த எலுமிச்சம் பழங்களை எடுத்து நீர்நிலைகளில் போட்டுவிட்டு, புதிதாக வைக்க வேண்டும்.

குடும்பச் சண்டை, உடல்ரீதியான பிரச்சனை, பண பிரச்சனை, சங்கடங்கள் போன்றவற்றை தீர்க்கக் கூடிய அற்புதமான பரிகாரமாக இந்த எலுமிச்சையை வெட்டி தலைவாசல் வைப்பது கருதப்படுகிறது. நம் வீட்டை சுற்றி பொறாமை பார்வைகள், துஷ்ட பார்வைகள் இருப்பதை இந்த எலுமிச்சை பழம் விலக்கிவிடும் என்று நம்பப்படுகிறது.

இது மட்டுமின்றி 11, 21, 51, 101 என்கிற ஒற்றைப்படை எண்ணிக்கையுடன் எலுமிச்சம் பழங்களை வரிசையாக மாலை போல கோர்த்து அதற்கு மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து தலைவாசல் மேலே கட்டி விடுபவர்களும் உண்டு. இது போன்று செய்வதால் தடையில்லாத வெற்றி கிடைக்கும், நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. புதிதாக தொழில் தொடங்குபவர்கள், கடை திறப்பவர்கள், புதுமனை புகுவிழா நடத்தி குடியேறுபவர்கள் வாராவாரம் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் தடவி வைத்து விட்டு அதை மறுவாரம் வெள்ளிக்கிழமை மாற்றி தொடர்ந்து இதுபோல செய்வது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.

சிலர் எலுமிச்சை பழத்துடன் பச்சை மிளகாய் சிறிய கருப்பு கட்டை கரித்துண்டு ஆகியவற்றை கட்டி தொங்க விடுவர். இதுபோன்று செய்வதால் நம் வீட்டிற்கு வருவோரின் பார்வை அந்த எலுமிச்சை பழத்தில் மேல் விழும். அப்படி அவர்கள் கவனம் எலுமிச்சை பழத்தின் மேல் சென்றால் திருஷ்டி ஏற்படாது என்பது ஐதீகம். இதேபோல் உங்கள் வீட்டிலும் இந்த எளிமையான எலுமிச்சை பரிகாரத்தை மேற்கொண்டால் சங்கடங்கள் தீர்ந்து, கண் திருஷ்டி விலகி, நன்மைகள் பெருகும், பண வரவு உண்டாகும் மற்றும் சுப காரியங்கள் நடக்கும்.