நம்மில் பல பேருக்கு பலவிதமான ஆசைகள் இருக்கும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது, பொருள் சேர்ப்பது, பணம் சேர்ப்பது, பிள்ளைகளின் திருமணம், குழந்தை வரம் என பல விஷயங்களை நாம் நினைத்துக் கொண்டிருப்போம். ஒரு சிலது நடக்கும் ஒரு சில காரியங்கள் நடக்காமல் தடைபட்டுக் கொண்டே இருக்கும். இதனால் பலருக்கு விரக்தி ஏற்படுவது உண்டு. இது சூழ்நிலை, கெட்ட நேரங்கள், ஜாதகத்தில் தோஷங்கள் போன்றவை இருந்தாலும் கூட காரியத்தடை ஏற்படும். இப்படி நம் காரியத்தின் தடைகள் எல்லாவற்றையும் விலக்கி விரைவாக நாம் நினைத்த காரியம் நடைபெற என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்பதை இனி காண்போம்.
நினைத்த காரியம் நிறைவேற முதலில் வழிபட வேண்டியது முழுமுதற் கடவுளான விநாயகரை தான். குறிப்பாக நினைத்த காரியம் விரைவில் நடக்க வேண்டுபவர்கள் சனிக்கிழமையில் சூரியன் மறைவதற்கு முன்பாக 5 மணி முதல் 6 மணிக்குள் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை சென்று வணங்க வேண்டும்.
நாம் நினைத்து நடக்க வேண்டிய காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு அரச மரத்தடி விநாயகரை 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். அதற்கு அடுத்ததாக விநாயகரை வணங்கிய பின்பு அரச மரத்தடியில் ஆறு அகல் விளக்குகளில் சுத்தமான பசு நெய் ஊற்றி அதில் குங்குமப்பூ சேர்த்து எரிய விட வேண்டும்.
இதுபோன்று ஆறு வாரங்கள் தொடர்ந்து விநாயகரை தரிசித்து தீபம் ஏற்றினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இது மட்டுமில்லாமல் கோவிலுக்கு சென்று வீட்டிற்கு வந்த பிறகு விளக்கேற்றி விநாயகரை மனதார நினைத்து விநாயகர் துதி, விநாயகர் அகவல் ஆகியவற்றை பாட வேண்டும். விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது சிறப்பு. அன்றைய தினம் முடிந்தவரை யாரேனும் ஒருவருக்கு அன்னதானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.