இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

By Abiram A

Published:

அதர்மங்கள் அழிந்து தர்மம் தலை தூக்கிய நாளே தீபாவளி என கூறப்படுகிறது. நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என செவிவழி கதைகள் கூறுகின்றன.

அதே போல் வடநாடுகளில் ராமர் தன்னுடைய பிரச்சினைகள் அனைத்தும் முடிந்து வனவாசம் எல்லாம் முடிந்து தலைநகர் அயோத்தி திரும்பிய நாளே தீபாவளி என சொல்லப்படுகிறது.

எது எப்படியோ தற்போதைய மனித வாழ்வில் எங்கும் எப்போதும் பிரச்சினைகள்தான் அதிகம் இருக்கின்றன.

20 வருடத்துக்கு முன்பு இருந்த வாழ்க்கை முறை கூட தற்போது இல்லை கடும் பிரச்சினைகளை கொண்ட வாழ்க்கையாக நம்முடைய வாழ்க்கை முறை மாறிவிட்டது. மேற்சொன்ன தீபாவளி காரணங்கள் இரண்டுமே நமக்கு தெரியாது. செவி வழி கதைகளை நம்பித்தான் நாம் அதை கொண்டாடுகிறோம் மேற் சொன்ன தீபாவளி காரணங்கள் இரண்டுமே தீமைகள் அழிந்து நன்மைகள் பிறந்த வரலாறாகத்தான் நாம் பார்க்கிறோம் அப்படி பார்க்கையில் அது எப்படி இருந்தால் என்ன? ராமரால் தீபாவளி வந்தது என்றாலும் சரிதான், கிருஷ்ணரால் தீபாவளி வந்தது என்றாலும் சரிதான் எப்படியோ நன்மை நடந்தால் சரி என்றுதான் நினைக்க வேண்டும். தற்போதைய பிரச்சினைக்குரிய வாழ்க்கை முறைகள் மாறி எங்கும் அமைதி நிலவ வேண்டும் என தான் நினைக்க வேண்டும். அதை விடுத்து திராவிட இயக்கத்தினர் சொல்லும் , இதை எல்லாமா நம்புறிங்க என்ற கருத்துக்களின் பக்கம் நாம் சென்று அவர்களிடம் பேச்சை வளர்ப்பது எல்லாம் வீண் வேலை.

அதனால் உயரிய சக்தி ஒன்று உள்ளதென்று நம்புங்கள். அது உங்களையும் என்னையும் காக்கும் என்று நம்புங்கள். அது அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் என்பதை தீபாவளி முதலாவது மனதார நம்புங்கள்  அந்த உச்ச சக்தி அனைவரையும் காப்பாற்றும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Leave a Comment