கோவில்கள் திறந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி

By Staff

Published:

364d9736bfd873b101f4c9f2bc72f076-1

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அதிமுக ஆட்சியிலேயே கொரோனா லாக் டவுன் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அது மிகவும் இருள் சூழ்ந்த காலமாக கருதப்பட்டது. இருள் சூழ்ந்த காலத்தில் ஒளி சூழ்ந்த கோவில்கள் இல்லையே இருந்தாலும் அங்கு சென்று பகவானிடம் வேண்டலாமே நமது மன சஞ்சலம் போகுமே என பலரும் வருத்தப்பட்டனர். ஏனென்றால் கொரோனா இரண்டாவது அலையால் பலரும் தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தனர்.

கடவுள் வாழும் கோவிலில் ஒரு கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டாலே பலரது மன சஞ்சலம் குறைந்து விடும் ஆனால் அதற்கு வழி இல்லாமல் இருந்தது. நேற்றுதான் தமிழ்நாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்கள் திறக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, சமயபுரம், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், மதுரை, சிதம்பரத்தில் உள்ள பெருங்கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெகு நாட்களுக்கு பின் கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்களுக்கு அதிக சந்தோஷம். ஏனென்றால் இவ்வுலகில் கண்ணுக்கு தெரியாத சக்தி ஒன்று உள்ளது அது நம்மை காப்பாற்றும் என்ற மனிதனின் ஆழமான வெளிப்பாடுதான் இது.

Leave a Comment