தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகள் மிகுந்த விசேஷ தினமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் வைணவ ஷேத்திரங்களில் இந்திய அளவில் லட்சக்கணக்கானவர்கள் தரிசனம் செய்யும் திருப்பதியில் பிரம்மோற்சவம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. இன்று புரட்டாசி சனி என்பதால் தமிழ் நாடு அளவில் எங்கெங்கு பெருமாள் கோவில்கள் உள்ளனவோ அங்கு எல்லாமே விசேஷ வைபவங்கள் நடைபெறும்.
மக்கள் கூட்டம் புரட்டாசி சனிக்கிழமையில் வைணவ ஆலயங்களில் அதிகம் இருக்கும் . இந்த முறை புரட்டாசி சனிக்கிழமையில் கொரோனாவை ஒட்டி வாரம் 3 நாட்கள் கோவிலை அடைக்க சொல்லி அரசு வலியுறுத்துவதால் இன்று அனைத்து வைணவ ஆலயங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
அதனால் வழக்கமாக புரட்டாசி சனி அன்று காலையிலே எழுந்து குளித்து விட்டு கோவிலுக்கு செல்லும் பக்தி உணர்வு மிக்க ஆண்களும் பெண்களும் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.