அனைத்துமானவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

By Staff

Published:


ff42bd00f704f8bc7334b618dd9d88cf

பாடல்

முற்றாத பால்மதியஞ் சூடி னானை
    மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தன்னைத்
    திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் தன்னைக்
    கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

விளக்கம்

வெள்ளிய பிறைமதியைச் சூடியவன். மூவுலகும் தானேயாய் இருக்கும் தலைவன். பகைவருடைய மும்மதிலையும் அழித்தவன். விளங்கும் ஒளிவடிவினன். இடப்பாகத்தது நிறத்தால் மரகதமணி போன்றவன். இன்பம்பயத்தலால் தேனும் பாலும் போன்றவன். குற்றாலம் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இளையவன். கூத்தாடுதலில் வல்லவன். யாவருக்கும் தலைவன். சிவஞானியர் ஞானத்தால் அறியப் பெற்றவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

Leave a Comment