அரூரன் -தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால் பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச் சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் ஆரூரன்எம் பெருமாற்காள் அல்லேன்என லாமே விளக்கம் மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி,…


91fb828776accedd1d5386564cd84644

பாடல்

காரூர்புன லெய்திக்கரை 
கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ் 
பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் 
நல்லூரருட் டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள் 
அல்லேன்என லாமே

விளக்கம்

மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் `அடியவனல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன