நமச்சிவாயம் வாழ்க!- திருவாசகப்பாடலும், விளக்கமும்..

பாடல்.. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க .. விளக்கம்..…


9468d36e1ea39d4587deffca80b34da5

பாடல்..

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ..

விளக்கம்..

நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன