முருகனின் உருவத்தத்துவம் இதுதான்..

By Staff

Published:

8356b94f379b838dc3c759743a228114

முருகு“ன்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று அர்த்தம். அதனால, முருகன் என்றால் அழகன் என அர்த்தமாகின்றது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ – மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் .

ஆறறிவு கொண்ட மனிதர்கள் வணங்கத்த கடவுள் எனப்பொருள்பட ஆறுதலை உள்ளது. முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகின்றது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகின்றது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு அமைந்துள்ளது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.

8fd53ad91c71fbac2a6063d37299c10c

இறைவன் ஞான வடிவினன். ஞான பண்டிதன் சக்தியின் துணைக்கொண்டு உலகைப் படைத்துக் காத்து ரட்சிக்கின்றான். அதை விளக்கும் சொருபமே முருகன். முருகன் ஞான சொருபம். வள்ளி இச்சா சக்தி (விருப்பம், ஆசை). தெய்வானை கிரியா சக்தி
(செயலாற்றல்). வள்ளித் திருமணத்தில் சிறந்த தத்துவம் அடங்கி உள்ளது. இறைவன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவன். இறைவன் சாதி வித்தியாசங்களைப் பார்ப்பதில்லை. ஆகவே இந்து சமயம் சாதி வித்தியாசக் கொள்கையை ஆதரிக்கவில்லை என்பதை வள்ளித் திருமணம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. மேலும் வள்ளித் திருமணம் வள்ளியாகிய சீவன், பேரின்பமாகிய சிவத்துடன் கலப்பதை
விளக்குகிறது. 

81f1de91d82c5ea2ff2294744a7ef394

முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரிய கண் இமைக்கும் நேரத்தில் காற்றை கிழித்து வருமாறு உருவம் கொண்டது. அழகிய மயில் அழகனுக்கு வாகனாமானது எத்தனை பொருத்தம்!!! அழகோடு வேகமாய் பறக்கும் ஆற்றலும் கொண்டது மயில்.ஆகவே, பக்தர்களின் துயரினை துடைக்க வரும் முருகனுக்கு மயில் வாகனமானது.  மயில் மனித மனதின் அடையாளம். பரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. சிறு சத்தத்துக்கே அச்சமுறும் தாவர பட்சிணியான மயில் , மாமிசபட்சிணியான கொடிய விசம் கொண்ட பாம்பின்மீது மயில்  முருகன் எல்லா சக்திகளையும் அடக்கி ஆட்சி செய்வதோடு, முருகனால் முடியாதது எதுமில்லை என்பதையும்  காட்டுகிறது.

தட்டு தடுமாறி நிற்போருக்கு ஊன்றுகோலாய் இருப்பேனென முருகன் கையிலிருக்கும் தண்டம் உணர்த்துகின்றது.   வாழ்க்கையில் உயர வெண்டுமென மலை உச்சியில் அமர்ந்து நமக்கு உணர்த்துகின்றான் முருகன்.   விடியலை உணர்த்தும் சேவல் முருகனது கொடியாய் இருந்து நமது வாழ்விற்கு விடியல் வரும் என சொல்கிறது.

Leave a Comment