இன்று கருட பஞ்சமி, விஷ்ணு பகவானின் வாகனமாய் கருடாழ்வார் இருக்கின்றார். இவர் இமைப்பொழுதும் விஷ்ணுபகவானை பிரிந்து இருந்ததில்லை. விஷ்ணு பகவான் எடுத்த அத்தனை அவதாரத்திலும் கருடாழ்வர் விஷ்ணு பகவானுடனே இருந்தார் என்கிறது புராணங்கள்.
துன்பத்தில் சிக்கி இருக்கும் பக்தர்களை காக்க விஷ்ணு பகவான் விரைந்து வர துணையாய் இருப்பவரே இந்த கருடன் தான். அதனால்தான், அவருக்கு கருடபகவான், கருடாழ்வார் என இறைவனுக்கு ஒப்பாகவும் அவரது அடியாருக்கு ஒப்பாகவும் கொண்டாடப்படுகிறார்..,
கருடாழ்வார் மூலமந்திரம்..
ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பக்சாய தீமஹி
தந்நோ கருட பிரசோதயாத்
இந்த மந்திரத்தை தினமும் காலைவேளையில் பூஜையறையிலோ அல்லது பெருமாள் கோவில்களிலோ பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதக்காலம் மந்திரத்தினை சொல்லி கருட பகவானை வணங்கி வந்தால், தன்னுடைய சக்தியில் ஒரு துளியை தருவதாய் கருட மாலா நூல் சொல்கிறது.