பைரவருக்கு தேங்காய், பூசணிக்காயில் விளக்கேற்றலாமா?!

By Staff

Published:


61da66523a2fa3b70845a77832530686

சில நேரங்களில் பைரவர் சந்நிதிமுன் தேங்காய், பாவற்காய், எலுமிச்சை, பூசணிக்காய்ன்னு விதம்விதமா விளக்கேத்தி வச்சிருப்பாங்க. ஏன் இப்படி  விளக்கேத்துறீங்கன்னு கேட்டா, தேங்காய், பூசணிக்காய்லாம் ரொம்ப நேரத்துக்கு எரியும். அப்படி ரொம்ப நேரத்துக்கு எரிஞ்சு நம்ம வேண்டுதலை கடவுளுக்கு நினைவுப்படுத்தும்ன்னு காரணம் சொல்வாங்க. உண்மையில் இப்படி விளக்கேத்தலாமா?! கூடாது.

சிவபெருமானின் 64 வடிவங்களில் 25வடிவங்கள் மிகச் சிறப்பாக பேசப்படுகின்றது. அதில், வேகவடிவமாக போற்றப்படுவது பைரவர் வடிவம் ஆகும். உமையல்லாது உருவம் இல்லை என்கிறது சித்தாந்தம் மற்றும் தேவார திருமுறைகள். அந்த வகையில் பைரவருக்கு ரக்ஷாகரி சமேத பைரவமூர்த்தியாம். மேலும் பைரவர் சிவபெருமானின் ஐந்து புத்திரர்களில் ஒருவர் என்றும் ஒரு சிலர் சொல்வாங்க. 

52d65e3466f09f0a2cbcc5fdacad4944

பைரவருக்கு சிவ ஆகமம் முறைப்படி சிவாச்சாரியார்கள் பூஜை வழிபாடுகள்தான் இப்பொழுதும் செய்து வருகின்றனர். செய்யனும். ஆனால் அதையெல்லாம் மக்கள் பொருட்படுத்தாமல் ஜோதிடகாரர்களின் பேச்சைக் கேட்டு பைரவருக்கு பூசணிக்காயால் மற்றும் தேங்காயில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.

பைரவருக்கு மட்டுமில்லை எந்த தெய்வத்க்குமே மண்ணாலான அகல்விளக்கில் மட்டுமே தீபம் ஏற்றனும். ஏனெனில், அகல்விளக்குதான்  நீர், நிலம் ,ஆகாயம், காற்று, நெருப்பு என்ற பஞ்சபூதங்களால் ஆனது,  பஞ்சபூதங்களின் தலைவனுக்கு பஞ்சபூதத்தாலான மண் அகல்விளக்கை ஏற்றுவதே சாலச்சிறந்தது.

காலப்போக்கில், ஐந்து உலோகங்களைக்கொண்டு சிலைகளும், பூஜை பொருட்களும் உண்டானது. சித்தர்கள் சொல்லியபடி சரிவிகதத்தில் கலந்த ஐம்பொன் சிலை, பூஜைப்பொருட்களை பயன்படுத்தலாமே தவிர, பகட்டுக்கு வெள்ளி, தங்கம்ன்னு சிலாரூபங்கள் செய்வதும் தப்பு, அதில் விளக்கேற்றுவதும் தப்பு.

இவையெல்லாம் கடவுளின்பால் நம்பிக்கை குறைந்து, ஜோதிடத்தின்பால் நம்பிக்கை கொண்ட இந்த பத்து இருபது காலத்தில் தோன்றிய பழக்கங்களேயன்றி ஆகமவிதிகளின்படி செய்வது இல்லை. அதனால் இப்படிலாம் வழக்கத்துக்கு மாறாக செய்து, புண்ணியம் சேர்ப்பதுக்கு பதிலா பாவத்தை சேர்க்க வேண்டாம். கூடவே கோவிலையும் அசுத்தப்படுத்த வேண்டாம்.

Leave a Comment