இந்தியாவெங்கும் வித்தியாச வித்தியாசமான விநாயகர்கள் உள்ளன. பாண்டிச்சேரி மணக்குள விநாயகர். சித்தூர் அருகே கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட காணிப்பாக்கம் விநாயகர், சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் மலையில் இருந்து குடைந்து எடுக்கப்பட்ட சிற்பமான கற்பக விநாயகர் கோவில், இராமநாதபுரம் உப்பூரில் மேற்கூரையே இல்லாமல் வெயிலுகந்த விநாயகர், இப்படி பல விநாயகர்களை கூறலாம்.
தமிழ்நாட்டில் இராமநாதபுரம் அருகே தூத்துக்குடி ஈஸி ஆர் சாலையில் காஞ்சிரங்குடி என்னுமிடத்தில் ஒரு சின்ன விநாயகர் கோவில் உள்ளது. ஆலமரத்தடி கோவில் போல சாலையோரம் உள்ள கோவில்தான். மிகப்பெரும் கோபுரத்துடன் உள்ள கோவில் கிடையாது.
இந்த கோவிலின் பெயர் கனவில் வந்த கணேசர் கோவில். இப்பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவரது கனவில் வந்து சொல்லியதால் கனவில் வந்த கணேசர் கோவில் என பெயர் வைத்து அவரால் முடிந்த இந்த சின்னக்கோவிலை கட்டியுள்ளார்.
நீண்ட வருடங்களாக சிறு கோவிலாக இருந்த இந்த கோவில் இப்போது கொஞ்சம் கட்டிடத்துடன் எடுத்து கட்டுவதற்கு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
காரிய தடங்களை அகற்றுவதில் மிக சக்தி வாய்ந்தவர் என்பது இவ்விநாயகரை வணங்கியவர்களுக்கு நன்கு தெரியும். அது போல் ஒரு காரியத்தை நினைத்து சென்றோமானால் 100 சதவீத வெற்றியை இந்த விநாயகர் கொடுப்பார்.