கொல்லூர் மூகாம்பிகை புகழ்பெற்ற ஒரு சக்தி ஸ்தலம். பெங்களூருவில் இருந்து மங்களூர் சென்று அங்கிருந்து கொல்லூர் செல்ல வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் இசைஞானி இளையராஜா போன்றவர்கள் விரும்பி செல்லும் ஸ்தலம். உயரிய ஞானத்தை அளிப்பவள் இவள். மஹான் ஆதிசங்கரரால் இந்த அம்பிகை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அன்னை தாய் மூகாம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் வேண்டும் வரத்தை அருள்கிறாள்
.ஆதி சங்கரர் ஸ்ரீமூகாம்பிகையை நோக்கி மனமுருகி “சவுந்தர்ய லஹரியை” இங்கு அமர்ந்து எழுதியதாகவும் இங்கே தான் அரங்கேற்றி அருளியதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த சரஸ்வதி மண்டபம்& கலா மண்டம் எனப்போற்றப்படுகிறது. கேரளம் தந்த மாபெரும் ஓவியர் ரவி வர்மா இங்கு சித்திரங்கள் வரைந்துள்ளார்.
இதை அடிப்படையாக வைத்துதாய் மூகாம்பிகை என்ற திரைப்படத்தில் வரும் ஜனனி ஜனனி என்ற இளையராஜா பாடிய பாடல் வரும் பார்த்திருப்பீர்கள் தாய் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்து அங்கே இருந்து ஆதிசங்கரர் பாடுவதாக அமையும். இளையராஜா இசையின் உயரிய ஞானம் எல்லோருக்கும் தெரியும் அத்தகைய உயரிய ஞானத்தை அவருக்கு கொடுப்பவள் இந்த தாய் மூகாம்பிகை. தாய் மூகாம்பிகையின் மீது கொண்ட அளவு கடந்த பக்தி காரணமாக இளையராஜா கொல்லூர் மூகாம்பிகை கோவில் சென்று வருவார்.
பாடல்கள் இசைக்கலைகளில் சிறக்க நவராத்திரியில் தாய் மூகாம்பிகையை வணங்கி நற்பேறு அடையலாம்.