இராம நாதபுரம் , சிவகங்கை மாவட்டங்களில் கண்கண்ட தெய்வமாக விளங்குவது இராம நாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூரில் அருள்பாலிக்கும் பாகம்பிரியாள்.
சமயபுரம், சபரிமலை உள்ளிட்ட இடங்களுக்கு பாதயாத்திரை செல்வதுபோல இந்த பாகம்பிரியாள் கோவிலுக்கும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள்.
வியாழக்கிழமை இந்தகோவில் சென்று தங்குவது மரபு. விடிந்தால் வெள்ளியன்று பாகம்பிரியாளை வழிபட அந்தக்காலத்தில் முதல் நாள் இரவே பாதயாத்திரையாகவோ எப்போதாவது வரும் பேருந்திலோ வந்து தங்கி விடிந்து வெள்ளிக்கிழமை அம்மனை வழிபட்டு செல்வது மரபு.
இப்போது நாகரீக காலமாக இருந்தாலும் வியாழக்கிழமையிலே கோவிலில் சென்று தங்கி காலையில் வல்மீக நாதருடன் கூடிய பாகம்பிரியாளை வணங்க கூடிய நிகழ்வு நடந்து வருகிறது.
எல்லாவித கோரிக்கைகளையும் நிறைவேற்றும் சக்தி வாய்ந்த அம்மனாக இங்கு பாகம்பிரியாள் விளங்குகிறாள்.
தீராத நோய் தீர்ப்பவளாக இந்த அம்மன் விளங்குவதால் இவளை மருத்துவச்சி அம்மன் என அழைக்கின்றனர்.
இப்பகுதியில் யாரேனும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டால் இங்குள்ள வாசுகி தீர்த்ததில் மூழ்க வைத்து கோவில் தீர்த்தத்தை பிரசாதமாக தருகின்றனர்.
இக்கோவிலில் இறைவனை பிரியாமல் வல்மீகனாதரோடு காட்சி தருவதால் பாகம்பிரியாள் என காட்சி தருகிறார். அதனால் பாகம்பிரியாள் என அழைக்கப்படுகிறார். மிக சக்தி வாய்ந்த ஸ்தலம்.
குறிப்பாக பெண்களின் எப்படிப்பட்ட வேதனையையும் சுலபத்தில் தீர்த்து விடும் தாயாக இருப்பதால் இவளைக்காண பெண்கள் கூட்டம் விரதம் இருந்து வருகிறது. பாகம்பிரியாமல் இறைவனோடு அம்பாள் இணைவதால் இக்கோவிலில் தங்கி வழிபட்டு சென்றால் கணவருடன் பிரச்சினை இல்லாமல் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை.
வரும் நவராத்திரிக்கோ அல்லது அதற்கு முன்போ பின்போ இக்கோவிலில் நீங்களும் வந்து வழிபட்டு செல்லலாம்.
நவராத்திரி 9 நாட்களும் இங்கு விசேஷம்.