மலையில் ஒரு தெய்வம் இருந்தால் அதன் மகத்துவமே தனி திருமலை திருப்பதி, பழனி மலை, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், வெள்ளியங்கிரி மலை என இயற்கை எழிலுடன் கூடிய மலையில் புகழ்பெற்ற கோவில்கள் பல இருக்கிறது.
அப்படி ஒரு கோவில்தான் மாதா வைஷ்ணவி தேவி கோவில். மற்ற கோவில்களுக்கு போவது போல் டிரெயின் டிக்கெட் புக் செய்து உடனே சென்று விடக்கூடிய கோவில் இது அல்ல.
அரசு அனுமதி பெற வேண்டும். ஜம்மு காஷ்மீர் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில் இது. இங்கு தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் விசாரணைக்குப்பின் தான் இந்த கோவில் செல்ல அனுமதிக்கப்படுவர். வயதானவர்களுக்கும் உரிய மருத்துவ சோதனைகள் செய்துதான் மலை ஏற அனுமதிப்பார்கள்.
இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும்,கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் எட்டு லட்சம் பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது கோரிக்கைகளை சொல்லி வணங்கி செல்கின்றனர்.
உதம்பூரில் இருந்து கத்ரா வரை ரயில்பாதை இருக்கும் அதன் பிறகு மலைமீது செல்வதற்கு முன் கட்ரா நகரத்தில் உள்ள கோயில் தேவஸ்தான அலுவலகங்களில் முன் அனுமதி சீட்டு பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இங்கு வைஷ்ணவி தேவியான பார்வதிதேவி சிரமத்துடன் மலையேறி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை நல்குகிறாள்.
மேலும் இங்கு முப்பெரும் தேவியர் என அழைக்கப்படும் பார்வதி லட்சுமி சரஸ்வதி மூவரும் இங்குள்ள குகையில் காட்சி தருகின்றனர்.
இயற்கை எழிலுடன் கூடிய இக்கோவில் சென்று வைஷ்ணவி தேவி அருள்பெற்று வளமுடன் வாருங்கள்.
இங்கு நவராத்திரி, சிவராத்திரி, தீபாவளி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கடும் குளிர் நிலவும் இக்கோவில் சென்று வருவது கொஞ்சம் சிரமமான காரியம்தான் இருந்தாலும் வைஷ்ணவி தேவியை நினைத்துக்கொண்டால் அனைத்தையும் அச்ச உணர்வை தகர்த்து உங்களை அவள் சன்னிதி வரவைப்பாள்.