மஹாளயபட்ச அமாவாசை நாள் முடிந்து வரும் அடுத்த நாளில் நவராத்திரி விரதம் தொடங்குகிறது. நவராத்திரிக்கு உரிய பொதுவான சிறப்பு அம்பிகை வழிபாடு என்றாலும் வேறு சில சிறப்புகளும் இந்த நவராத்திரி நாளுக்கு உண்டு.
நவராத்திரிக்கு படைக்கப்படும் உணவுகளை தேவர்களே வந்து சாப்பிடுவதாக ஐதீகமாம். இந்த பத்து நாளில் விஜய தசமி அன்றுதான் இராமன் இராவணனுடன் போர் புரிய புறப்பட்ட நாளாம்.
வில்வித்தை வீரன் அர்ஜூனன் ஒரு வருடம் கட்டி வைத்திருந்த ஆயுதங்களை விஜயதசமி அன்று எடுத்து உயிர்ப்பித்துக்கொண்டானாம்.