நவராத்திரி ஸ்பெஷல்- கண்ணகி கோவில்-கேரளா

By Staff

Published:

இக்கோவிலுக்கு நாம் நவராத்திரிக்கு சென்று உரிய முறையில் வழிபாடு செய்யப்படாவிட்டாலும் நவராத்திரி நாயகியான அம்மனின் உக்கிர அம்சமான கண்ணகியை பற்றி நாம் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.


தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலுள்ள கூடலூர் வனப்பகுதியில் மலைமேல் 14 கிமீ சென்றால் இக்கோவிலை அடையலாம். இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது இக்கோவில்.

bfed0bc0464e694977f08f783b373f19-1

மதுரையை எரித்த கண்ணகி அப்படியே கோபாவேசமாக சென்றதாகவும் அப்படியே கேரளாவின் இந்த எல்லைக்கு வந்த உடன் வானிலிருந்து பல்லக்கில் வந்து கோவலன் அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

அந்த அடிப்படையில் இங்கு கோவில் உள்ளது. வருடத்துக்கு ஒரு முறை சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் இரு மாநில மக்களும் வழிபட முடியும் இந்த கோவிலுக்கு தமிழகம், கேரளா இரு மாநிலங்களும் சொந்தம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மிக நீண்ட வரிசையில் நின்றுதான் இந்த அம்மனை தரிசிக்க முடியும்.

Leave a Comment