துர்காஷ்டமி என்றால் என்ன

சந்திரமுகி படம் பார்த்திருப்பீர்கள் இன்னைக்கு துர்காஷ்டமி என்ற வார்த்தை அந்த படத்தில் கேட்டு உங்களுக்கு பழகி போயிருக்கும். இருந்தாலும் பல வருடங்களாகவே துர்காஷ்டமி பூஜைகள் களைகட்டித்தான் வருகின்றன. ராகு காலத்தில் ராகு தோஷம் நீங்க…

சந்திரமுகி படம் பார்த்திருப்பீர்கள் இன்னைக்கு துர்காஷ்டமி என்ற வார்த்தை அந்த படத்தில் கேட்டு உங்களுக்கு பழகி போயிருக்கும். இருந்தாலும் பல வருடங்களாகவே துர்காஷ்டமி பூஜைகள் களைகட்டித்தான் வருகின்றன.

664123cea5c62b0361ef95fcfb1a2b1d

ராகு காலத்தில் ராகு தோஷம் நீங்க பெண்கள் கோவில்களில் துர்க்கை அம்மனுக்கு , நெய், மற்றும் எலுமிச்சை விளக்கு போடுவது வழக்கம். இதன் மூலம் ராகுவினால் ஏற்படும், திருமணத்தடை, குழந்தையின்மை நீங்குவதாக ஐதீகம்

சாதாரண நாட்களிலே துர்க்கை அம்மன் தன்னுடைய அருளை வாரி வழங்கும்போது அவளுக்கென்று வரும் நவராத்திரியில் ஒரு நாளில் அருளை வாரி வாரி வழங்குவாள் என்பது ஐதீகம்.

நவராத்திரி எட்டாம் நாளை துர்க்கைக்குரிய நாளாக கருதி வழிபடுகின்றனர். இந்த நாளன்று துர்க்கை அம்மனுக்குரிய மந்திரங்கள் சொல்லி மனமுருக வழிபட்டால் நிச்சயமாக பரிபூரண வாழ்வை நமக்கு துர்க்கை அருள்வாள் என்பது நம்பிக்கை.

துர்க்கைக்குரிய எட்டாம் நாள் நவராத்திரியையே நாம் துர்காஷ்டமி என்கிறோம். நாளை துர்காஷ்டமி நாளாகும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன