தீபாவளிக்கு பிறகு வரும் சஷ்டி திதி கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்த சஷ்டி நாளன்றுதான் அதர்மத்தை செய்த அசுரனை முருகப்பெருமான் அழித்தார்.
இதனால் திருச்செந்தூரில் இவ்விழா மிக பிரசித்தி பெற்று விளங்குகிறது தீபாவளிக்கு அடுத்த நாள் கந்த சஷ்டி விழாவுக்கு காப்பு கட்டிய உடன் விரதம் துவக்குகின்றனர் பக்தர்கள் ஆறாம் நாள் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. பகல் முழுவதும் விரதம் இருந்து இரவு மட்டும் சாத்வீகமான உணவை அருந்துகின்றனர். சிலர் பாலும் பழமும் மட்டுமே அருந்துகின்றனர்.
மலேசியா, சிங்கப்பூர் என கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்து திருச்செந்தூரில் பக்தர்கள் உபவாசம் இருக்கின்றனர்.
இந்த உபவாசம் மிகவும் சக்தி வாய்ந்தது. தீராத பல பிரச்சினைகளை முருகன் இவ்விரதம் இருப்பதால் தீர்த்து வைக்கிறார் என நம்பப்படுகிறது.
முக்கியமாக குழந்தை இல்லாதோருக்கு இந்த விரதம் கண்கண்ட மருந்து எனவும் கூறப்படுகிறது. 6 நாட்கள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்களாக இருந்தாலும் கந்த சஷ்டி இறுதி நாளன்று விரதம் இருந்து காலையில் கடலில் குளித்து முருகனின் சிந்தனைகள், கதைகள், மந்திரங்களை, பாடல்களை மட்டுமே கேட்டும் பார்த்தும் சொல்லி வரவேண்டும் மாலை சூரனை வதம் செய்து முடித்த உடன் கடலில் நாழிக்கிணற்றில் குளித்து முருகனை வணங்கி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்றொரு பழமொழி உண்டு அதன் உண்மையான அர்த்தமே சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் கரு உருவாகும் என்பதேயாகும்
அதனால் குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதம் இருந்து முருகப்பெருமானின் பேரருள் பெறலாம். இது மட்டுமல்லாமல் எதிரிகள் தொல்லை, வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் கந்த சஷ்டி விரதம் கண்கண்ட மருந்து இந்த வருடம் கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் மட்டுமின்றி முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் அனைத்து கோயில்களிலும் வரும் நவம்பர் 2ம்தேதியன்று கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது