இன்று விஜயதசமி- களைகட்டும் குலசேகரப்பட்டினம்

வெற்றியை கொண்டாடும் நாளாக விஜய தசமி கொண்டாடப்படுகிறது. அசுரனை அழித்த அம்பிகையான துர்க்கையை வழிபட்டு வாழ்வில் காணாத வளம் காணலாம். இன்று விஜயதசமியையொட்டி புதிய நிறுவனங்கள் ஆரம்பிப்போர், புதிய தொழில் தொடங்குவோர், ஆகியோர் இன்று…

வெற்றியை கொண்டாடும் நாளாக விஜய தசமி கொண்டாடப்படுகிறது. அசுரனை அழித்த அம்பிகையான துர்க்கையை வழிபட்டு வாழ்வில் காணாத வளம் காணலாம்.

04a01057952a94a8090fc1b2b64121b0

இன்று விஜயதசமியையொட்டி புதிய நிறுவனங்கள் ஆரம்பிப்போர், புதிய தொழில் தொடங்குவோர், ஆகியோர் இன்று தொடங்கினால் வெற்றியாகும் என்பது நம்பிக்கை.

குழந்தைகளை இன்று பள்ளியில் சேர்த்தால் நல்லதொரு கல்வி கொண்ட வாழ்க்கை முறை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.

இன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா களை கட்டி இருக்கும் .இரவு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன், அசுரனை வதம் செய்வாள்.

இதற்காக வெளிமாநிலங்கள் வெளியூர்களில் இருந்தும் தூத்துக்குடி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட பலரும் இங்கு வந்து குவிவார்கள்.

இதற்காக அதிக பக்தர்கள் மாறுவேடம் அணிந்து விரதம் இருந்து பக்தர்களிடம் யாசகம் கேட்டு முத்தாரம்மன் கோவிலில் கொண்டு போய் சேர்ப்பர்.

இன்று குலசேகரப்பட்டினமே களை கட்டி இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன