திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று முதல் சர்க்கரை கலந்த பால் பிரசாதம் விநியோகம்

பிரசித்திபெற்ற முருகன் கோவில்களில் ஒன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி முருகன் கோவில். இது தெய்வானையை முருகன் மணமுடித்த இடமாக கருதப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. மதுரை நகரின் மையப்பகுதியாக திருப்பரங்குன்றம் திகழ்கிறது.…

பிரசித்திபெற்ற முருகன் கோவில்களில் ஒன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி முருகன் கோவில். இது தெய்வானையை முருகன் மணமுடித்த இடமாக கருதப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது.

753a6f7f3c34cdc55593bfc79ee90518

மதுரை நகரின் மையப்பகுதியாக திருப்பரங்குன்றம் திகழ்கிறது. இங்கு பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை முருகன் அளிக்கிறார்.

சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்க அரசு முடிவு செய்து அது வழங்கப்பட்டு வரும் நிலையில் மதுரையின் மற்றொரு முக்கிய கோவிலான இந்த கோவிலில் இன்று முதல் சர்க்கரை கலந்த பால் பிரசாதமாக விநியோகிப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வாமிக்கு அபிசேகம் செய்யும் பால் வீணாவதை தடுக்க இந்த முறை பின்பற்றப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன