திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது மிகவும் கவனித்து பார்க்க வேண்டிய கோவில் இடுக்கு பிள்ளையார் கோவில். மிகவும் குறுகலான பாதையில் வந்து பிள்ளையாரை தரிசிக்கும் வகையில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
சிறிய ஆலயம்தான் இது இதில் மூன்று வாசல்கள் உள்ளது. பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்து ஒருக்களித்து படுத்தவாறே வளைந்து, தவழ்ந்து, 2-வது வாசலில் நுழைந்து, முன்வாசல் வழியாக வெளியே வரும் அளவுக்கு இக்கோவில் இருக்கும் .
இக்கோவில் வித்தியாசமாக இருக்கிறது என்பதற்காகவே உள்ளே கிரிவலம் செல்வோர் இந்த குறுகல் பாதையில் நுழைந்து விநாயகரை தரிசிப்பர்.
திருவண்ணாமலை சென்றால் கிரிவலம் வரும்போது கண்டிப்பாக இந்த இடுக்கு பிள்ளையாரை வணங்கி வாருங்கள். இக்கோவில் விநாயகரை வணங்கினால் உடல் பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை.