ஹிந்துக்களின் புண்ணியத்தலங்களில் முதன்மையானது காசி நகரம் இங்குள்ள விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் கண் குளிர தரிசிக்க பலரும் இங்கு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். வயதான நபர்கள் அனைவருமே தாம் இறப்பதற்குள் காசிக்கு சென்று விட வேண்டும் அங்கு சென்று வந்தே ஆக வேண்டும் என டிராவல்ஸ் கம்பெனிகளில் புக் செய்து சென்று வருகின்றனர்.
காசி முழுவதும் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளதால் அவற்றை சுற்றி பார்ப்பதென்பது மிகவும் கடினமான விசயமாகும்.
எப்படி இருந்தாலும் காசிக்கு செல்பவர்கள் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு செல்பவர்கள் காசியின் காவல் தெய்வமாக பல வருடங்களாக காசி நகரை காவல் காத்து வரும் தெய்வமாக அறியப்படும் கால பைரவரையும் வணங்கி வர வேண்டும்.
இவருக்கு இங்கு கோவில் உள்ளது.
காலபைரவரே சனீஸ்வரனின் குரு அதனால் இவரை வணங்கினால் தன் சிஷ்யரிடம் சொல்லி சனீஸ்வரனின் கடும் பாதிப்புகளை விலக்குவார் என்பதும் நம்பிக்கை.
மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து காணப்படுகிறார். “கால்” என்ற சொல்லானது “இறப்பு” மற்றும் “விதி” ஆகிய இரண்டு பொருள்களைக் கொண்டதாகும். “கால பைரவரவரைக்” கண்டு மரணம்கூட அஞ்சுவதாக நம்பப்படுகிறது.
காலபைரவரின் வாகனமாக நாய் இருக்கிறது இங்கு வெள்ளி முகத்தில் கால பைரவர் ஜொலிக்கிறார்
விரிந்த கண்களுடனும், பெரிய மீசையுடனும், முழங்காலளவு நீண்ட கைகளுடனும் காலபைரவர் காட்சியளிக்கிறார். இங்கு ஷேத்ரபாலபைரவர் சிலையும் பின்புறம் உள்ளது.