நாளை கார்த்திகை தீப பெருவிழா நடைபெறுகிறது அனைத்து பெரும்பாலான சிவாலயங்கள் மலைமேல் உள்ள கோவில்களில் மலைமேல் தீபம் ஏற்றப்படும்.
முக்கியமாக முருகன் ஆலயம் அனைத்திலும் கார்த்திகை தீபம் பெரிய அளவில் ஏற்றப்படும்.
திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்திலும் கார்த்திகை தீப பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இங்கும் மலைவலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இது போல் தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் . சொக்கப்பனை என்றால் பனை மர ஓலைகளை கூம்பு போன்று அமைத்து கார்த்திகை தீபத்தன்று சிவாலயக் கோபுர உச்சியில் தீபம் ஏற்றி, பஞ்ச மூர்த்திகளுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது .
மலைக்கோவில் அல்லாத இடங்களிலும் கோவிலின் வெளியே சொக்கப்பனை அமைத்திருப்பார்கள் அங்கே சொக்கப்பனை கொளுத்துவார்கள் எரியும் அக்னியை கடவுளாக நினைத்து வழங்குவார்கள்.
இது தமிழ்நாட்டில் நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் விசயமாகும்.