கரூர் நகரத்தின் முக்கிய கோவில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில். காமதேனு வழிபட்ட கோவில் இது. இந்த கோவிலில் தான் 18 சித்தர்களில் ஒருவரான கருவூரார் ஜீவசமாதி அடைந்துள்ளார்.
இந்த கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். கரூர் நகரின் முக்கிய கோவிலாகவும் கரூர் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே இக்கோவில் இருப்பதால் இந்த கோவிலை வணங்கி செல்லாதவர்கள் இருக்க முடியாது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலின் உள்ளேயே கரூவூரார் ஜீவசமாதி அமைந்துள்ளது. ராஜராஜ சோழனின் குருவானவர் இவர். அஷ்டமா சித்திகளை கற்றுத்தேர்ந்தவர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் செல்லும்போது இவரை மானசீகமாக வணங்கி வாருங்கள். பெளர்ணமி தினத்திலும் குருவுக்குரிய வியாழக்கிழமைகளிலும் இவரை வழிபடுவது மிகவும் சிறப்பு. துன்பம் துயரங்களில் இருந்து விடுபடும் நல்லதொரு மனபலத்தை நமக்கு கொடுப்பார்.
தொடர்ந்து வழிபட்டு கரூவூராரின் அருள் பெறுங்கள்.