மஹான் ராகவேந்திரர் மந்த்ராலயம் ஆந்திராவில் உள்ளது. இங்கு பல லட்சம் பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ராகவேந்திரர் மந்த்ராலய பிருந்தாவனத்தில் ஜீவசமாதியான பிறகு ராகவேந்திரர் நீண்ட நாட்கள் இருந்த தஞ்சாவூரில் ஒரு கோவில் கட்ட பக்தர்கள் விரும்பி அவருக்கு கோவில் கட்ட சரியான இடம் தேடியபோது அவர் இருந்த இடத்தை ஒரு நாகம் வட்டமிட்டு காட்டி கொடுத்ததால் அந்த இடத்தில் அவருக்கு ஒரு கோவில் எழுப்பபட்டது. இது தஞ்சையில் வடவாற்றங்கரை என்ற இடத்தில் உள்ளது.
அதே போல் நடிகர் ராகவா லாரன்ஸ் தனக்கு இருந்த புற்றுநோயை நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனைப்படி ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி அதில் இருந்து நிவாரணம் பெற்றுள்ளார். இதனால் ராகவேந்திரரின் தீவிர பக்தராக லாரன்ஸ் ஆனார்.
இவர் சென்னையில் ஆவடி- அம்பத்தூர் இடையே அமைந்துள்ள திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரில் ராகவேந்திரர் கோவிலை எழுப்பியுள்ளார்.
கடந்த 2009ல் அமைந்த இந்த கோவில் இன்றளவும் விசேஷ நாட்களில் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.
குருவுக்குரிய வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு இங்கு நடைபெறுகிறது.