தெய்வங்கள் குடிகொள்ளும் மார்கழி நாளை பிறக்கிறது

மார்கழி மாதம் தெய்வங்களுக்குள்ள மாதமாக கருதப்படுகிறது. தெய்வத்திருமணங்கள் பல புராணங்களின் படி மார்கழி மாதமே நடைபெற்றுள்ளது. இந்த மார்கழி மாதத்தில் மட்டும் தேவர்கள் ரிஷிகள், முனிவர்கள் என தெய்வரூபமாக இருக்கும் அனைவருமே அதிகாலை நீண்ட…

மார்கழி மாதம் தெய்வங்களுக்குள்ள மாதமாக கருதப்படுகிறது. தெய்வத்திருமணங்கள் பல புராணங்களின் படி மார்கழி மாதமே நடைபெற்றுள்ளது.

47b0dbf9dd15ea3ba914429c19aecdd6

இந்த மார்கழி மாதத்தில் மட்டும் தேவர்கள் ரிஷிகள், முனிவர்கள் என தெய்வரூபமாக இருக்கும் அனைவருமே அதிகாலை நீண்ட நேரம் அருள்புரிவார்கள்.

மார்கழி மாதத்தில் எல்லா கோவிலிலும் காலை பூஜை சீக்கிரமே நடைபெறும் அதிகாலை கோவில் திறந்து தெய்வங்களுக்கு பொங்கல், சுண்டல் நைவேத்யம் நடைபெறும்.

தெருவோரமாக இருக்கும் சிறு கோயிலானாலும் பூசாரி அதிகாலை சீக்கிரமே கண் விழித்து அந்த தெய்வத்துக்குரிய பூஜையை சரியாக செய்வார்கள்.

பொதுவாக 4 மணியில் இருந்து 6 மணி வரை பிரம்ம முகூர்த்த காலம் என சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் எதை செய்தாலும் நமக்கு நன்மை அளிக்கும். தெய்வவழிபாடு கை மேல் பலன் தரும்.

அதிகாலை எழுந்து தண்ணீரில் குளித்து வீட்டில் விளக்கேற்றி இறைவனுக்குரிய மந்திரம் ஓதி பூஜை செய்தால் மனம் அமைதியாக இருக்கும்.

இறைவனை நினைத்து தியானம் செய்யவும் இது ஏற்ற நேரம். மார்கழி மாதம் தெய்வத்துக்குரிய மாதம் என்பதால் ஒரு மாதமும் அதிகாலையில் எழுந்து பூஜை செய்தால் உங்கள் பூஜைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் நிச்சயம் அந்த இறைவன் செவிசாய்ப்பார்.

உங்களுக்கு பிடித்த தெய்வ மந்திரங்களை இந்த நேரத்தில் ஜெபித்து நலம் பெறுங்கள்.

மார்கழியில் ஆண்டாளுக்குரிய திருப்பாவை திருவெம்பாவை படிக்கலாம் சிறப்பை தரும். கோவில்களில் நடைபெறும் பஜனைகளிலும் கலந்து கொள்ளலாம்.

நாளை மார்கழி பிறக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன