திருவண்ணாமலையில் வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருவிழாவன்று மலைமீது உயர்ந்த தீபம் ஏற்றப்படும். இந்த திருவிழா ஆரம்பிப்பதற்கு முன்பே காப்புக்கட்டப்பட்டு மிகப்பெரிய அளவில் பத்து நாட்கள் உற்சவங்கள் நடைபெறும்.
முக்கிய திருவிழாவான கார்த்திகை அன்று மலையில் மஹாதீபம் ஏற்றப்படும்.
சமீபத்தில் கார்த்திகை திருவிழாவுக்கு மஹாதீபம் ஏற்றப்பட்டது.இந்த தீபமானது உயர்ந்த மலையில் ஏற்றப்படுவதால் சுற்றுவட்டாரம் 40கிமீ அளவுக்கு இந்த தீபம் அனைவருக்கும் தெரியும். தீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து 11 நாட்களுக்கு எரியும் தீபம் பின்பு எடுக்கப்பட்டு அந்த தீப மை பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்படும்.
இந்த வருடத்துக்கான தீபவிழா இன்றுடன் முடிவடைகிறது. வரும் ஆருத்ரா தரிசனத்தன்று தீபமை பக்தர்களுக்கு வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.